வருக... அனைவருக்கும் வணக்கம்!
டாக்டர் அ.சாந்தா
நீண்ட காலமாகவே, வலைப்பூ பயிற்சி இதழில் மாணவர்கள் எழுத வேண்டும் என்று விரும்பினேன். தற்போது அதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மாணவர்கள் வேண்டிய போது, தாங்கள் விரும்பியவற்றை எழுதி தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள இது நல்ல வாய்ப்பாக அமையும்.பத்திரிகைகளிலும் இதழ்களிலும் எழுதும் அதே உற்சாகம் மாணவர்களிடம் இங்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.வாசகர்களிடம் இருந்து வரும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அவை அனைத்தும் மாணவர்களின் முயற்சிக்கு பெரும் ஊக்கம் அளிக்கும். வணக்கம்.
- துறைத் தலைவர், இதழ் ஆசிரியர்

4 Comments:
வாருங்கள் டாக்டர் சாந்தா. வலைப்பூக்களை இதழியல் பயிற்சிக்கான களமாக பயன்படுத்துவது ஆரோக்கியமான சிந்தனை. பாராட்டுக்கள்
அன்புடன்
மாலன்
நல்ல முயற்சி பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
உண்மையான் வளர்ச்சி என்பது உங்கள் மாணவர்கள் நிறைய இதில் ஈடுபடுவதில் உள்ளது. எந்த அளவு என்றால் விரைவில் பலர் தனிப்பதிவுகள் தொடங்கி, இந்த 'பயிற்சி இதழ்' அவைகளை ஒருங்கிணைக்கும் compiler-ஆக (ஓராண்டுக்குள் ?)மாற வேண்டும். மீண்டும் வாழ்த்துக்கள்.
தகவல் தொடர்பியலின் 'அ' கூட தெரியாமல் 'அகர முதல' எழுத வந்த எனக்கும், எனது சகாக்களுக்கும் நுனுக்கங்களைக் கற்றுக் கொடுத்து, கற்றுக் கொள்ள பல வாய்ப்புளை ஏற்படுத்திக் கொடுத்த எங்களது மதிப்புக்குரிய மேடத்தின் இந்த பிளாக் - ஒரு இனிய ஆச்சரியம்.
நாங்கள் படித்தது தகவல் தொடர்பியல் என்றாலும் எங்களுக்குள் இப்போது எந்தவித தகவல் தொடர்பும் இல்லாத அளவுக்கு வாழ்க்கை முறைகள் புரண்டு போயிருப்பினும், இந்த பிளாக்கைப் பார்த்ததும் முதலில் தோன்றியது மிகப் பெரிய மகிழ்ச்சி.
தவற விட்டு விட்ட விரலை மீண்டும் கண்டுபிடித்து பிடித்துக் கொள்ளும்போது கிடைக்கிற சந்தோஷம்.
சாந்தா மேடம், மிகுந்த சந்தோஷம் - உங்களை வலைப் பூ மூலம் காண.
கூடை நிறைய வாழ்த்துப் பூக்களுடன்
அறிவழகன்
Post a Comment
<< Home