Friday, February 03, 2006

நம்முடைய உயரம் நம் எண்ணத்தின் உயரம்

சுகி.சிவம் பேச்சு

- பொன்ராஜ் -

பேச்சுபள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரும், படித்து முடித்து வேலைதேடும் இளைஞர்களும் சாரைசாரையாய் ஆஜராக, இராஜபாளையம் பி.ஸ்.கே. நூற்றாண்டு விழா திருமண மண்டபமே நிரம்பி வழிந்தது.
ஸ்கோப் 2005 என்ற பெயரில் இராஜபாளையம் ரோட்டரி கிளப் ஏற்பாடு செய்திருந்த மாணவ, மாணவவியருக்கான வேலை வழிகாட்டி நிகழ்ச்சியின் ஸ்பாட் தான் இந்த பி.ஸ்.கே. திருமண மண்டபம்.
நுழைவுக் கட்டணம் ஐம்பது ரூபாய் என்றாலும் காற்று புக முடியாத அளவுக்கு அரங்கத்தில் கூட்டம் அலைமோத காரணம் இருந்தது.
அது -சுகி.சிவம்.பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தககள், ஒலிநாடாக்கள், ஆன்மீக சொற்பொழிவுகள், தன்னம்பிக்கை உரைகள் என வெவ்வேறு தளங்களில் தனது சொல்லாற்றலால் வெற்றிக் கொடி நாட்டி வரும் சு.கி. சிவத்தின் உரைக்காக மாணவர்கள் தவம் கிடக்க வேண்டியதாயிற்று. 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், கடைசிவரை கூட்டம் கலையாமல் பார்த்துக் கொள்ள விழாக் குழவினார் நிகழ்ச்சி நிரலில் கடைசியாக சுகி. சிவத்தின் உரையை போட்ட டெக்னிக்தான் மாணவர்கள் காலை முதல் மாலைவரை மாதவம் செய்யக் காரணமாயிற்று.
காலை தொடங்கி மாலை வரை ராஜுக்கள் கல்லூரி முதல்வர் டாக்டர்.வி. வெங்கட்ராமன் (வெற்றிக்கு ஏழு படிகள்), இதயம் முத்து (சுயதொழில் மந்திரம்) சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி பேராசிரியர் (ஓய்வு) ராமச்சந்திரன் (உன்னால் முடியும் தம்பி) பேராசிரியர் இராஜா கோவிந்தசாமி (நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது எப்படி?) ஆகியோர் கலக்கலாய் உரையாற்றி அமர்ந்து விட பொன் மாலைப் பொழுதில் தன் உரையை தொடகினார் ----. வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் மனிதர் சென்னை வெள்ளம் போல் பின்னி எடுத்துவிட்டார்.
கை தட்டல் மழை பொழிந்த மாணவ மாணவியருக்கு அவரது கருத்துக்கள் ஒவ்வொன்றும் பூஸ்ட். அசரவைத்த உரையிலிருந்து...
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பினை இங்கே பார்க்கிறேன். நீங்கள் எந்தக் கைகளை தட்டினீர்களோ அந்தக் கைகளில்தான் இந்தியாவை மாற்றக்கூடிய சக்தி உள்ளது என்பதை உங்களுக்கு புரிய வைத்துவிட்டால் என் வேலை முடிந்துவிடும்.
எப்போதும் அடுத்தவர்களின் அங்கீகாரத்துக்கு ஏங்காதீர்கள், உங்களை நீங்களே அங்கீகரியுகள். உலகே முதலில் பாரதியின் கவிதையினை புறக்கணித்த போது தமிழ்நாட்டுக்கு கவியரசர் இல்லை என்ற பழி என்னால் போகும் என்று தன்னம்பிக்கையுடன் கூறினானே அந்த தன்னனம்பிக்கைதான் அவனை வாழ வைத்தது. மற்றவர்களின் அபிப்பிராயங்களல்ல.தாழ்வு மனப்பான்மையை தள்ளி விடுங்கள். உலகப்பேரழகியை கூட மைக்ரோஸ்கோப்பில் பார்த்தால் அவள் கன்னங்கள் மேடு பள்ளமாகத்தான் இருக்கும்.
நீங்கள் அழகின்றி படைக்கப்பட்டதாக நினைத்தால் அதற்கு வெட்கப்பட வேண்டியது நீங்களல்ல., ஆண்டவன்தான்.கறுப்பாக இருப்பதால் கவலைப்படாதீர்கள். நம் பாட்டி,பாட்டன் எல்லாம் உழைத்த பரம்பரை என்பதால்தான் நாம் கறுப்பு. அதற்காக நாம் பெருமைப்பட அல்லவா வேண்டும். எப்படி படைக்கப்பட்டிருக்கிறீர்களோ அதை கொண்டாடுங்கள்.புடித்த குடும்பத்தில் இருந்து படித்தவன் வருவதில் பெருமைப்பட ஒன்றுமில்லை.
படிக்காத குடும்பத்தில் இருந்து படித்து வருகிற நீ அதற்காக பெருமைப்பட வேண்டுமே தவிர சிறுமைப்படக் கூடாது.மாற்ற முடியாதபடி இருக்கின்றவற்றை மாற்றுவதில் தான் உங்கள் வெற்றி உள்ளது. ஆங்கிலம் பிழையின்றி பேசுங்கள், திருத்திக் கொள்ளலாம். பேசாமல் மட்டும் இருந்து விடாதீர்கள். காந்திஜி, விவேகானந்தர் கூட ஆங்கிலத்தை பிழையோடு எழுதியவர்கள்தான்.வாத்தியாரைப் பார்த்து ரொம்பவும் பயப்படாதீர்கள். ஆவர் நமக்கு முந்தைய செட் அவ்வளவுதான். கிரிக்கெட் ஒரு கீதா உபதேசமென நான் எழுதியிருக்கிறேன். கிரிக்கெட் ஆட ஒருவன் களத்தில் இறங்கினால் அவனை அவுட் ஆக்க பல பேர் இருப்பார்கள். வாழ்க்கையிலும் அப்படித்தான்.சாராயக்கடைகளால் ஆண்கள் முட்டாளாகிப் போனது போல தமிழ்நாட்டுப் பெண்கள் சீரியல்களினால் முட்டாளாகிப் போனார்கள்.
இப்படிப்பட்ட பெற்றோரை மன்னியுங்கள். அவர்களின் தோல்வியை சொல்லிக் கொண்டே நீங்களும் தோற்றுப் போகாதீர்கள்.
எவ்வளவு படிக்க முடியுமோ படியுங்கள். எவ்வளவு மொழி உங்களுக்கு தெரிகிறதோ அவ்வளவு பலசாலி நீங்கள்.நான் ஒரு கதை சொல்வதுண்டு. திருவள்ளுவர் தாமரையின் உயரம் என்ன? என்று ஒரு மாணவனிடம் கேட்டார். அவன் தண்ணீரின் உயரம் தாமரையின் உயரம் என்றான். அடுத்த கேள்வியைக் கேட்டார் உன் உயரம் என்ன? இந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளித்தால் எதையும் வெல்லலாம். வாழ்க்கையில் நம்முடைய உயரம் நம் எண்ணத்தின் உயரம்தான்.ஆரவார கைதட்டலோடு விழா முடிந்ததும் கிளம்பிய மாணவர்களுள் ஒருவன் சொல்லிச் சென்றான். இனிமேல் ஒழுங்கா தினமும் படிக்கணும்.
இவ்விழாவின் வெற்றியை போல கலந்து கொண்ட மாணவர்களுக்கும் இனி வெற்றி நிச்சயம்தான்.

0 Comments:

Post a Comment

<< Home